www.garudabazaar.com

Pandian Stores: நீங்கதான் தைரியமான ஆளாச்சே.. சொல்லுங்கக்கா!.. ஏத்திவிட்ட ஐஸூ.. திக்குமுக்காடிய மீனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. பாண்டியன் ஸ்டோர்ஸ், பல சரக்கு கடை மரபை தொடரும் குடும்பம். கூட்டு குடும்பமாக அண்ணன்-தம்பி பாசத்துடன் வாழ்ந்து வருவது தான் இந்த கதை.

pandiyan stores meena play school issue serial update

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி, கதிர், ஜீவா, கண்ணன் ஆகியோர் அண்ணன் தம்பிகள். இந்த அண்ணன் தம்பிகளின் பாசப்போராட்டம், இந்த குடும்பத்தின் மருமகள்கள், அனைவரையும் வழிநடத்தும் மூத்த அண்ணன் - அண்ணியான மூர்த்தி - தனா ஆகியவை தான் இந்த சீரியலில் முக்கியத்துவம் பெறுபவை. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களில் ஒருவரான ஜீவா மற்றும் அவருடைய மனைவி மீனா இருவருக்கும் இடையில் இவர்களது குழந்தையை படிக்க வைக்கும் விவகாரத்தில் முரண்பாடு எழுந்துள்ளது.

அண்மையில்தான், மீனாவின் தங்கை நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், மீனாவின் அப்பா, பந்தியில் சாப்பிட உட்கார்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை எழுப்பி அசிங்கப்படுத்தியதற்கு மீனா பொங்கி எழுந்து தன் தந்தையிடம் ஆவேசமாக பேசியிருந்தார். தனது புகுந்த வீட்டை விட்டுக்கொடுக்காமல் பேசி மீனா சென்சேஷனல் ஆனார்.

இந்நிலையில்தான் தற்போது மீனா குழந்தையை இரண்டு வயதிலேயே பிளே ஸ்கூல் அனுப்ப வேண்டும் என்று வீட்டார் அனைவரிடமும் சொல்லிப் பார்க்கிறார். ஆனால் அனைவரும் குழந்தை இயல்பாக வளர வேண்டும், விளையாட வேண்டும், மிக சிறிய வயதிலேயே பள்ளிக்கெல்லாம் அனுப்ப வேண்டாம் என்று கூறுகின்றனர். அதை சற்றே கிண்டல் தொனியில் பாண்டியன் சோர்ஸ் குடும்பம் கூற, மீனா அப்செட் ஆகிறார். எனினும் தன் கணவரின் தம்பி மனைவியான ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு பிளே ஸ்கூலுக்கு சென்று பார்க்கிறார் மீனா.

அங்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கு கட்டணம் எவ்வளவு என்பது முதற்கொண்டு கூறுகின்றனர். இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் மீனா, “வீட்டாரிடம் இது பற்றி பேசுவதற்காக நான் முயற்சிக்கப் போகிறேன். கண்டிப்பாக பேசத்தான் போகிறேன்” என்று ஐஸ்வர்யாவிடம் கூறிக் கொண்டிருந்தார்.

Also Read | முடிவுக்கு வந்தது பாரதி கண்ணம்மா விவாகரத்து கேஸ்.. கோர்ட் சொன்ன பரபரப்பு தீர்ப்பு!..

ஆனால் அனைவரும் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா நைசாக மீனாவிடம் சென்று, “அக்கா நீங்க தான் தைரியமான ஆளாச்சே. இது பற்றி பேச போறேன் என்று சொன்னீர்களே.. பேசுங்கள்” என்று ஊக்குவிக்கிறார். ஆனால் மீனாவோ பம்புகிறார். அவரது ரியாக்‌ஷன்கள் வழக்கம்போல் காமெடியாக ரசிக்கும்படியாக அமைந்துள்ளன. எனினும் இந்த பிரச்சனை அடுத்து பூதாகரமாக கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | குடும்பமாய் திரண்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள்! வைரல் ஃபோட்டோ.. என்ன விசேஷம்..?

தொடர்புடைய இணைப்புகள்

pandiyan stores meena play school issue serial update

People looking for online information on Pandiyan Stores, Pandiyan stores meena comedy, Pandiyan stores serial update will find this news story useful.