www.garudabazaar.com

அதிர்ச்சி! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்!.. ரசிகர்கள் ஆறுதல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 18, பிப்ரவரி, 2022: இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்டாலின் முத்து. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Pandian Stores actor Stalin muthu family relatives demise

மூத்த அண்ணன் மூர்த்தியாக

ஆம்,  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடித்து வரும் ஸ்டாலின் முத்துவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பேராதரவும் நிலவுகிறது.

அண்ணன் தம்பிகளின் பாசக்கதையை மையமாகக் கொண்ட குடும்ப சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

குடும்பத்தில் நேர்ந்த சோகம்

இந்த சீரியலில் மூத்த அண்ணனாக பலரது இதயம் தொட்ட, ஸ்டாலின் முத்து, சுமார்12 ஆண்டுகளுக்கு மேல் நடிப்பு துறையில் இருக்கிறார். தேனி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இவரது குடும்பத்தில் அண்மையில் ஒரு பெரும் சோகம் நடந்தது. ஆம், ஸ்டாலின் முத்துவின் பெரியம்மா காலமான செய்தி பரவி வந்தது.

இதனால் ரசிகர்கள் பலரும், இவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் நடிகர் ஸ்டாலின் முத்து மீண்டும் ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தமது சோசியல் மீடியாவில் பதிவிட்டு, தனது மனைவியின் அம்மா காலம் ஆனதை குறிப்பிட்டு தமது இரங்கல்களையும் வேதனையையும் பகிர்ந்துள்ளார்.

மனைவியின் தயார்

இது குறித்து ஸ்டாலின் முத்து, தமது சோஷியல் மீடியாவில், “என் அன்பு மனைவியின் தாயாருக்கு ஆழ்ந்த இரங்கல். Rest In Peace for My Mother in Law” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஸ்டாலின் முத்து குடும்பத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு துயர நிகழ்வுகளுக்கு அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அரபிக் குத்து பாட்டுக்கு பீஸ்ட் மோடுல ஆடிய இயக்குநர் நெல்சனின் மகன்.. பாராட்டி பகிர்ந்த இளம் ஹீரோ.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores actor Stalin muthu family relatives demise

People looking for online information on Stalin muthu, Stalin muthu Pandian Stores, Vijay tv serial will find this news story useful.