www.garudabazaar.com

வதந்தி வெப் சீரிஸில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'.

Pandian Stores Actor Kumaran Thangarajan vadhanthi web series

இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார்

Pandian Stores Actor Kumaran Thangarajan vadhanthi web series

அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் இரண்டாம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தொடரான 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அமேசான் ப்ரைம் வீடியோவின் 'வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் வெளியாகி. வெகு பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்த தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல், 30க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளுடன், 240 பிராந்தியங்களிலும் வெளியாகிறது.

இந்த வெப் சீரிஸில் நடித்துள்ள குமரன் தங்கராஜன், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குமரன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " எனது ரசிகர்கள் &  குடும்பத்திற்கு நன்றி! "புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பயணத்தின் போது கையை பிடித்துக் கொண்டு நடக்க எப்பொழுதும் சில கைகள் தேவை. எனக்கு இது தேவை என்று நான் கூறவில்லை, நீங்கள் அனைவரும் இதை எப்போதும் செய்து வருகிறீர்கள். குறிப்பாக வதந்திக்காக, என்றென்றும் செய்வீர்கள் என்று கூறுகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. .." உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்" என குமரன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pandian Stores Actor Kumaran Thangarajan vadhanthi web series

People looking for online information on Kumaran, Pandian stores, Sj suryah, Vadhandhi, Vathanthi will find this news story useful.