Jai been others
www.garudabazaar.com

“ஜெய்பீம் டைட்டில் தேடினப்போ ரஞ்சித் சார்ட்ட இருந்தது.. அவர் சொன்ன வார்த்தை”.. சூர்யா பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா, ரெஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெய் பீம் திரைப்படம்.

pa ranjith heartfelt words jaibhim title suriya exclusive video

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ளார் சூர்யா. இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்த்தில் பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கும் நடிகர் சூர்யா இப்படத்தின் தலைப்பை வைப்பதற்கு பா.ரஞ்சித் அனுமதி கொடுத்தது பற்றி நெகிழ்ந்து கூறினார்.

அப்போது பேசிய சூர்யா, ““ஜெய்பீம் என்கிற டைட்டிலை நாங்கள் முடிவு செய்தபோது அந்த டைட்டில் யாரிடம் இருந்தது என்றால் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களிடம் இருந்தது. அவரிடம் இந்த இப்படி ஒரு படம் நாங்கள் எடுத்துக் கொண்டு இருக்கோம். இந்த டைட்டில் வைக்கலாம் என்று நினைக்கிறோம். நீங்கள் படம் தொடங்குகிறீர்களா? அந்த டைட்டில் வைக்க போகிறீர்களா? எங்களுக்கு அந்த டைட்டில் கொடுக்க முடியுமா? என்று கேட்டோம்.

அப்போது பதில் அளித்த ரஞ்சித் அவர்கள், ‘இதில் என்ன சார் இருக்கிறது? இது பொதுவான டைட்டில் .. எல்லாத்துக்கும் சொந்தமான டைட்டில் சார்.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் தங்களுடைய அன்பை காட்டினர். ரஞ்சித் இப்படி சொன்னது மிகவும் முக்கியமான ஒன்று. ரஞ்சித் சாருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

“ஜெய்பீம் டைட்டில் தேடினப்போ ரஞ்சித் சார்ட்ட இருந்தது.. அவர் சொன்ன வார்த்தை”.. சூர்யா பேட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

pa ranjith heartfelt words jaibhim title suriya exclusive video

People looking for online information on Pa Ranjith, Suriya Jyothika JaiBhim JaiBhimOnPrime JaiBhimTrailer will find this news story useful.