www.garudabazaar.com

தளபதி பத்தி ஷாருக் கான்... ஒரே வார்த்தையில் 'தெறி' பதில்! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் ஷாருக் கான் நடிப்பு சகாப்தம் 29 ஆண்டுகளை கடந்த நிலையில், தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் நேரம் செலவிட ஷாருக் முடிவு செய்தார்.

one word about thalapathy vijay Shah Rukh Khan viral reply SRK29

இதனை அடுத்து நடிகர் ஷாருக் கான் #AskSRK எனும் சமூக வலைதள அமர்வைத் தொடங்கினார். அவர் அறிவித்த சில நிமிடங்களில், நூற்றுக்கணக்கான கேள்விகளை ரசிகர்கள் தொடுக்கத் தொடங்கினர். ஆனால் ஷாருக்கால், தம் பிஸியான நேர நெருக்கடியில் 20-க்கும் குறைவான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது. என்றாலும் அவை முற்றிலும் மதிப்புக்குரிய நேரம் தான் என்பதை ரசிகர்கள் உணர்ந்தே இருந்தனர்.

முன்னதாக "பாலிவுட்டில் 29 ஆண்டுகள் செலவழித்ததில் சிறந்த பகுதி எது?" என்று ஷாருக் கானிடம் கேட்கப்பட்டபோது, ​​"இது எனது வாழ்க்கையின் சிறந்த 30 ஆண்டுகள் மற்றும் மேலும் இன்னும் எண்ணிக்கையில் உள்ளது" என்று கூறினார். அத்துடன் அடுத்து ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படம் பண்ணுகிறாரா? என்றும் கேட்கப்பட்டது.  இன்னொரு ரசிகரின் கேள்விக்கு "வெளியே சென்று தினமும் கடினமாக உழைக்க வேண்டும். வேலைதான் உத்வேகம்" என்று ஷாருக் பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், "தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தை?" என கேட்க, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், அந்த ரசிகரின் கேள்விக்கு 'தெறி' பதில் அளித்திருக்கிறார். அதுவும், அந்த ரசிகர் விஜய்யின் படத்தை ட்வீட் செய்து இந்த கேள்வி கேட்டார். இதற்கு ஷாருக் கான், விஜய் “மிகவும் கூல்” என்று பதிலளித்தார். விஜய் மற்றும் ஷாருக் கானின் ரசிகர்கள், ஷாருக் கானின் இந்த பதிலை கேட்டதுமே குஷியாகிவிட்டனர். இந்த ட்வீட் 20,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 7000 ரீட்வீட்களுக்கும் அதிகமான ரீட்வீட்களையும் பெற்றது.

தளபதி விஜய் தற்போது நடித்துவரும் தளபதி65 படத்துக்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி66 படத்தில் நடிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது.

ALSO READ: "இனிமே இப்படித்தான்!".. திடீரென பெயரை மாற்றிக் கொண்ட பிரபல இளம் நடிகர்!

 

தொடர்புடைய இணைப்புகள்

one word about thalapathy vijay Shah Rukh Khan viral reply SRK29

People looking for online information on BeastFirstLook, BeastVijay, Shah Rukh Khan, Shark, Thalapathy65, ThalapathyVijay, Vijay will find this news story useful.