Bigil USA Desk Others

சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ்க்கு தீபாவளி டிரீட் கொடுத்த 'தர்பார்' டீம் - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தை லைக்கா புரொடக்சன் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

New poster released from Superstar Rajinikanth's Darbar

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஜட்டின் சர்னா பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ் பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த படம் வருகிற 2020 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தீபாவளி ஸ்பெஷலாக புது போஸ்டர் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் புது போஸ்டரை பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.