www.garudabazaar.com

Arabic Kuthu: அரபிக் குத்து பாட்டுக்கு இயக்குநர் நெல்சன் மகன் செம டான்ஸ்.. வீடியோ #BeastMode #Vijay

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 18, பிப்ரவரி 2022: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார்.

Nelson Son BeastMode dance for Arabic Kuthu Vijay அரபிக் குத்து

இந்த திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

Also Read: அபிராமி & பாலாஜி LOVE பண்றாங்களா? நிரூப்பிடமே கேட்ட வனிதா.. "அபி என் Ex".. நிரூப் பரபரப்பு பதில்

தளபதி 65 - பீஸ்ட்

நடிகர் விஜய், மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து நடிக்கும் அவரது 65வது திரைப்படம் இது. இந்த படத்துக்கு பீஸ்ட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட முதலாகவே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

பீஸ்ட் முதல் சிங்கிள் 

அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுக்கு, முன்னதாக இந்த பாடல் தயாரான விதம் குறித்த ஒரு ஜாலி கேலியான புரோமோவை படக்குழுவினர் வெளியிட்டனர். 

அரபிக் குத்து ப்ரோமோ

அந்த ப்ரோமோவில், இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இந்த பாடலை எழுதிய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருந்தனர். அரபிக் குத்து என்று அறிவிக்கப்பட்ட இந்த பாடலில் ஹலமதி ஹபிபோ என்கிற வரிகள் முக்கியமாக சொல்லப்பட்டது.

பாடல் வெளியீடு

இந்த நிலையில்தான் இந்தப் பாடல் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் வெளியாகி அனைவரிடத்திலும் வைரலாகி வருகிறது. இந்த பாடலை இணையதளத்தில் பலரும் ரீல்ஸ் உள்ளிட்டவை மூலம் இமிடேட் செய்வது உள்ளிட்ட விஷயங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். பலருக்கும் பிடித்தமான விருப்பப் பாடலாக மாறிவிட்ட இந்த பாடல் தற்போது அனைவரிடத்திலும் ரிப்பீட் மோடில் இருக்கிறது.

Also Read: சமந்தா Airport-ல வெச்சு அரபிக்குத்து பாட்டுக்கு செம Dance .. அதுவும் பீஸ்ட் மோடுல.. தெறி வீடியோ

பீஸ்ட் மோடில் நெல்சனின் மகன்

முன்னதாக இந்த பாடலுக்கு அனிருத் நடனம் ஆடியிருந்தார். இவரை தொடர்ந்து இந்த பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மகன் ‘ஆத்விக்’ இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கும் வீடியோவை நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன் பதிவிட்டிருக்கிறார்.

இதனை பகிர்ந்த திரைப்பட நடிகர் கவின், ‘என் தலைவன் வந்துட்டான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தலைவர் 169

இதனிடையே இயக்குநர் நெல்சன் திலீப்குமார், நடிகர்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கவுள்ள அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Nelson Son BeastMode dance for Arabic Kuthu Vijay அரபிக் குத்து

ரஜினிகாந்த்தின் 179 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தையும் பீஸ்ட்,  அண்ணாத்த படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ARABIC KUTHU: அரபிக் குத்து பாட்டுக்கு இயக்குநர் நெல்சன் மகன் செம டான்ஸ்.. வீடியோ #BEASTMODE #VIJAY வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Nelson Son BeastMode dance for Arabic Kuthu Vijay அரபிக் குத்து

People looking for online information on Anirudh ThalapathyVijay, ArabicKuthu, Beastfirstsingle, BeastFromApril, BeastMode, HalamithiHabibo, Nelson Dilipkumar, Samantha, ViralVideo will find this news story useful.