''தடைகளை தகர்த்து...'' - இந்த நயன்தாரா படம் குறித்து வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த ஐரா திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அவர் இருவேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை சர்ஜூன் இயக்கியிருந்தார்.

Nayanthara's Kolaiyuthir kaalam will release in July

அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் 'கொலையுதிர் காலம்'. இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் தடைகளை தகர்த்து ஜூலை மாதம் வெளியாகும் என போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டார்போலாரிஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.