ஷம்மு ஹேப்பி அண்ணாச்சி.. நடிகை சமந்தாவுக்கு 'காதல்' கணவர் கொடுத்த பிறந்தநாள் 'பரிசு'...!
முகப்பு > சினிமா செய்திகள்குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சமந்தா. இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக மாற, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார். தளபதி விஜய், சியான் விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா, சில வருடங்களுக்கு முன்பு தனது காதலரான நடிகர் நாக சைதன்யாவை மணந்து ஆந்திராவில் குடியேறினார். அவர்கள் இருவரும் தமிழில் ஒன்றாக 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் நடித்திருந்தனர்.

கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். பிறந்தநாள் பரிசாக மனைவிக்கு தன் கையால் கேக் செய்து கொடுத்துள்ளார் சைத்னயா. அதை பார்த்த நடிகை சமந்தா ஆச்சரியத்தில் கொடுத்த போஸ் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதே போல் #HappyBirthdaySamantha என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது. நடிகை சமந்தாவிற்கு Behindwoods சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.