www.garudabazaar.com

LATEST : த்ரிஷ்யம் பட இயக்குனருடன் மீண்டும் இணையும் மோகன்லால்! 12th Man படத்தின் மரணமாஸ் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம், த்ரிஷ்யம்-2 படங்களை இயக்கியவர் ஜீத்து ஜோசப். தமிழில் கமல்ஹாசனை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய இயக்குனர் இவரே.

mohan lal - jithu joseph 12th man movie update

மலையாளத்தில் த்ரில்லர் படங்களை இயக்குவதின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர். இவர் இயக்கிய த்ரிஷ்யம் திரைப்படம் மலையாள சினிமாவில் மைல்கல் திரைப்படமானது. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் பாபநாசம் - 2 என்று ரீமேக் ஆகப்போகிறது.

mohan lal - jithu joseph 12th man movie update

இந்நிலையில் மீண்டும் மோகன்லாலை வைத்து ஜீத்து ஜோசப் '12th Man' படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் இந்த படத்தை தயாரிக்கிறார். விநாயக் எடிட்டிங் செய்கிறார். அணில் ஜான்சன் பின்னணி இசையில் இந்த படம் உருவாகிறது.

mohan lal - jithu joseph 12th man movie update

24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மலையாள புத்தாண்டான ஸிங்கம் மாதத்தில் இன்று (17.08.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளது. 

mohan lal - jithu joseph 12th man movie update

எர்ணாகுளத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் முதல்கட்ட படப்பிடிப்பும், அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24 முதல் 15 நாட்கள் தொடப்புழாவிலும் படப்பிடிப்பு நடைபெறுகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

mohan lal - jithu joseph 12th man movie update

People looking for online information on 12 th Man, Jeethu Joseph, Mohanlal will find this news story useful.