Godavari News Banner USA

'சூரரைப் போற்று' - ''எங்கப்பா எவ்வளவு ஹேன்ட்ஸமா இருக்காரு'' - பிரபல நடிகரின் மகள் ஆச்சரியம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஏர் டெக்கன் குரூப் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாம். இந்த படம் சம்மர் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் மோகன் பாபுவின் கேரக்டர் பெயர் குறித்த தகவல் | Mohan Babu Character Name and P

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, சூர்யாவின் ஆலோசகராக நடித்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் மோகன் பாபுவின் பெயர் பக்தவச்சலம் நாயுடு என்று கூறப்படுகிறது. இது அவரின் உண்மையான பெயராம்.

இந்நிலையில் இதுகுறித்து மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சுவின் ட்விட்டர் பதிவில், என் அப்பா தனது உண்மையான பெயரில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது எனக்கு தெரியாது. எனது அப்பா எவ்வளவும் ஹேண்ட்சமாக  இருக்கிறார்.

சூரரைப் போற்று படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்கா இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்க , அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், விவேக்  பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Entertainment sub editor