KAAPAN USA OTHERS

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்தை பாராட்டிய தமிழக அமைச்சர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் நிறுவனம் சார்பில் பார்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் ஒத்த செருப்பு.  இந்த படத்தில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இரண்டு டிரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Minister Kadambur Raju Wishes Parthiban's Oththa Seruppu

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள குளிருதா புள்ள பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்து தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், அன்புச் சகோதரர் பார்த்திபன் (ஒத்த செருப்பு திரைப்படம்) அவர்களின் அருமையான முயற்சிக்கு எனது பாராட்டுதல்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அளவில் தமிழ் படங்களுக்கு விருதுகள் இல்லை என்ற நிலையை இந்த திரைப்படம் போக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. ஒரே ஒருவர் தயாரிப்பாளராக, இயக்குநராக நடிகராக எடுக்கப்பட்ட இந்த படம் உலக சினிமாவில் முதல் படம் என்ற பெருமையை தமிழ் படத்திற்கு அளித்ததற்காக சகோதரர் பார்த்திபனுக்கு பாராட்டுக்கள்.

திரைப்படத்தை இந்திய அளவில் தமிழ் படத்துக்கு விருதுகள் இல்லை என்ற குறையை இந்த படம் போக்கும் என்பதில் ஐயப்பாடில்லை. அதற்கு அரசின் சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அத்தனையும் மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று இந்த அரசு செய்யும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்றார்.