பிரம்மாண்டமா ஒரு ஃப்லிம் சிட்டி கட்டப் போறாங்க... எங்கன்னு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை தரமணி எம் ஜி ஆர் ஃபிலிம் சிட்டி மற்றும் ஹதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி இவை சினிமா எடுப்பவர்களுக்கு சொர்க்க பூமி. காரணம் இங்கு எல்லாவிதமான செட்டுக்களும் ஒரே கூரையின் கீழ் கிடைத்துவிடும். இதே போல தற்போது பெங்களூரில் ஒரு மினி ஃபிலிம் சிட்டியை உருவாக்கவிருக்கிறார் தயாரிப்பாளர் உமாபதி ஸ்ரீநிவாஸ். ஹெப்புலி, ராமர்ட், மடகஜா உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார்.

பெங்களூரில் மினி ஃப்லிம் சிட்டி| mini film city in Bengaluru

கன்னட பட இயக்குனர்கள் ஒவ்வொரு தடவையும் ஹைதராபாத்துக்குச் சென்று தங்கள் பட வேலைகளை முடிக்க வேண்டியிருப்பதால், நிறைய பணச் செலவு மற்றும் நேரம் செலவாகிறது. மேலும் அங்குள்ள படக்குழுவினரையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

எல்லா விஷயங்களையும் ஒருங்கிணைத்து ஷூட்டிங் எடுத்து முடிப்பதற்குள் மன உளைச்சல் ஏற்படுகிறது என்பதால் தயாரிப்பாளர் உமாபதி உள்ளூரில் இந்த முயற்சியை தொடங்கியுள்ளார். கன்னடப் படத் தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த மினி ஃப்லிம் சிட்டியை கட்டவிருக்கிறார். இந்த ஃப்லிம் சிட்டி கனகபுரா ரோட்டில் 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கிறது.

மேலும் இந்த ஃப்லிம் சிட்டி மிகவும் மாடர்னாகவும், எல்லா வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று உமாபதி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியது, ‘தென்னிந்தியாவின் பிரம்மாண்டமான ஃபிலிம் சிட்டியாக இது இருக்கும்.

ஒரு படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி சீன் வரை முழுக்க முழுக்க இங்கேயே ஷூட் செய்யும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலைகள், கிராமங்கள், ரெயில்வே ஸ்டேஷன், ஹாஸ்பிடல், பெரிய வீடுகள் என பலவிதமான செட்டுக்கள் இங்கே போடப்படும்’ என்றார் உமாபதி. அவரது மனதில் இந்தத் திட்டம் நீண்ட நாட்களாக இருந்தது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,பெங்களூரிலிருந்து அரை மணி நேரத்துக்குள் இந்த இடத்துக்கு வந்துவிடும் வசதியுடன்,  விதான் செளதாவிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த ஃப்லிம் சிட்டி வேலைகள் தொடங்கிவிட்டது.  ஒரு தயாரிப்பாளராக என்னுடைய துறைக்கு ஏதாவது பயனுள்ள ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எல்லா வசதிகளையும் கொண்ட இந்த சினிமா ஸ்டூடியோ அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

இந்த ஃபிலிம் சிட்டியில் சினிமா படங்கள் மட்டுமில்லை, ரியாலிட்டி ஷோ, டெலி சீரியல்களி ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor