பிரபல நடிகை சுரேகா வாணியின் கணவர் மரணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'உத்தமபுத்திரன்', 'காதலில் சொதப்புவது எப்படி?', 'தெய்வதிருமகள்', 'எதிர்நீச்சல்', 'மெர்சல்', 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Mersal, Viswasam fame Surekha Vani's husband passed away

இவரது கணவர் சுரேஷ் தேஜா, பிரபல தொலைக்காட்சிகளில் இயக்குநராக பணிபுரிந்துவந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுப்ரிதா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் சுரேஷ் தேஜா, கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று ( May 6 ) அன்று மரணமடைந்தார்.