’மாஸ்டர்’ SECOND LOOKகின் வெறித்தன EXPECTATION மத்தியில் விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய FIRST LOOK!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 15, 2020 02:55 PM
விஜய்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் மாஸ்டர் படத்தின் செக்கண்ட் லுக்கிற்காக ரசிகர்கள் வெறித்தனமான வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி தனது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் முதல் லுக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். மேகா ஆகாஷ், கனிகா, விவேக் நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர்கள் மகிழ்திருமேனி , மோகன் ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ், சினி அனாவேஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது.
விஜய் சேதுபதியின் பிறந்தநாள் நெருங்குவதைத் தொடர்ந்து இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது தவிர விஜய் சேதுபதி மாமனிதன், க/பெ ரணசிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
#YaadhumOoreYaavrumKelir First Look Poster.@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @Actor_Vivek @jayam_mohanraja @nivaskprasanna @raguadityaa @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/J4A0PECyNe
— VijaySethupathi (@VijaySethuOffl) January 15, 2020