www.garudabazaar.com

நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சூப்பர் பைக்.. விலை மட்டும் இம்புட்டா! 🤩 அப்படி என்ன ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மஞ்சு வாரியர் புதிய BMW சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார்.

Manju Warrier Bought New BMW R GS 250 Bike Details

Image Source: Manju Warrier Instagram

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியர். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பொங்கலுக்கு ரிலீசான துணிவு படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று பொங்கலை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. துணிவு திரைப்படம்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர்கள் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த BMW பைக் வாங்குவதை  வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Manju Warrier Bought New BMW R GS 250 Bike Details

Image Source: Manju Warrier Instagram

BMW R 1250 GS மாடலை சேர்ந்த மஞ்சு வாரியரின் பைக் விலை, கொச்சியில் 26 லட்சம் ரூபாய் வரை (On Road) விற்கப்படுகிறது. இந்த பைக்கை மஞ்சு வாரியர் கொச்சி BMW ஷோ ரூமில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் 21 கிலோ மீட்டர் மைலேஜ் தரவல்லது. 250 கிலோ எடையுள்ள இந்த சூப்பர் பைக், 1254 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வல்லது. இந்த பைக் 20 லிட்டர் பெட்ரோல் கொள்ளவும் கொண்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Bought New BMW R GS 250 Bike Details

People looking for online information on BMW R 1250 GS, Manju Warrier will find this news story useful.