www.garudabazaar.com

உடல் முழுவதும் குருதி கறையோடு விக்ரம்.. மாளவிகா மோகனன் பகிர்ந்த 'தங்கலான்' போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தங்கலான்' படத்தின் புதிய போஸ்டரை  மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

Malavika Mohanan Shared Thangalaan New Poster Chiyaan Vikram

நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க வயல் பகுதியில் நடந்து வருகிறது.  ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன், இணைந்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது.  ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தங்கலான் படத்தின் சிறப்பு வீடியோ காட்சிகள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் இருக்கும் புதிய போஸ்டரை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உடல் முழுவதும் குருதி கறையோடு விக்ரம் போஸ்டரில் தோன்றியுள்ளார். வெண் துணிகள் காலில் கட்டப்பட்டும் விக்ரம் காட்சியளிக்கிறார்

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Shared Thangalaan New Poster Chiyaan Vikram

People looking for online information on Thangalaan, Vikram will find this news story useful.