www.garudabazaar.com

தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் தனது தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

Malavika Mohanan Celebrate Her Brother Birthday

Also Read | கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகனை வாழ்த்திய ஐஸ்வர்யா! என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க!

2013 ஆம் ஆண்டில் வெளியான 'பட்டம் போலே' எனும் மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

கேரளாவை சார்ந்த இவர்,  ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தமிழில் தோன்றியிருந்தார்.

பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்திற்கு முன் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான "பியான்ட் தி கிளவுட்ஸ்" படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பின்னர்  விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.

அண்மையில் தனுசுடன் மாறன் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம் நேரடி பிரீமியராக வெளியானது. தாரா எனும் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தார்.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.

சமீபத்தில்  மாளவிகா மோகனன், பிரபல ராப் இசை பாடகர் பாட்ஷா & பாடகர் பாயல் தேவ்வுடன் இணைந்து TAUBA இசை வீடியோவில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பி ஆதித்யா மோகனனின்  பிறந்தநாளை  முன்னிட்டு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தம்பியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன் தனது பதிவில், "இப்போது நீ வளர்ந்திருப்பதை பார்க்க ஆச்சரியமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. நீ ஆச்சர்யமான, ஆர்வமிகுதியான, உணர்திறன் உடைய, அன்பு நிறைந்த, திறமை வாய்ந்த, அதீத திறமை வாய்ந்த ஒருவன். எனக்கு ஞாபகம் உள்ளது சின்ன வயசுல நிறைய சண்டை போட்டுள்ளோம்‌. பெரியவர்களான பிறகே நெருக்கமானவர்களாக மாறினோம். நீ எனக்கு பிடித்த Listener, என்னுடைய மிகப்பெரிய ஆதரவாளர் (அம்மாவுக்கு பெரிய போட்டியாளர்). எனது மனித விக்கிப்பீடியா, என்னுடைய மோசமான சூழ்நிலையில் எனக்கான ஆறுதல் தலையணை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Boy. உன் இதயம் விரும்பும் அனைத்தும் பெற நான் உன்னை வாழ்த்துகிறேன்"  என மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

Also Read | THUNIVU: 'துணிவு' படத்தின் ப்ரோமோ பாடல்.. களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்! தெறி அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Malavika Mohanan Celebrate Her Brother Birthday

People looking for online information on Brother Birthday, Malavika Mohanan will find this news story useful.