Cheat Day-வாம் ! - மனைவி குறித்து ஆர்யா பகிர்ந்த ஃபோட்டோ வைரல் - பிரபல ஹீரோயின் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சாயீஷாவின் அம்மா, ஆர்யா - சாயீஷா இருவரும் கப் கேக்குடன் இருக்கும் ஃபோட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த கப் கேக்கை விட நீங்கள் இனிமையானவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கு பதலளித்த நடிகர் ஆர்யா, நான் எல்லாத்தையும் சாப்பிட்டேன். சீட் டே. நன்றி மனைவி. அடுத்ததற்காக வெயிட் பண்றேன் என்று கமெண்ட் செய்துள்ளார். இதற்கு நடிகை மஹிமா நம்பியா ஹார்ட்டின் எமோஜியை கமெண்ட் செய்துள்ளார்.
நடிகர் ஆர்யா - சாயீஷா இணைந்து நடித்துள்ள 'டெடி' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தை 'மிருதன்', 'டிக் டிக் டிக்' பட இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
I had them all😋😋😋 Cheat day 😍😍😍 Thank you wifey 😘😘🤗 waiting for the next 😉 https://t.co/AWB69keOKQ
— Arya (@arya_offl) April 19, 2020