’Quarantine-ஆல சில சந்தோஷங்கள் இருக்கு’ – சூப்பர் ஸ்டார் நடிகர் மகளுடன் செம ஜாலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் மகேஷ் பாபு. ஹீரோயிசம், காமெடி, எமோஷன் என்று கமர்ஷியல் சினிமாவுக்கான பத்து பொருத்தங்களும் பக்காவாக அடங்கிய அவர் படங்கள் பல வெற்றிகளை குவித்துள்ளன.

Mahesh Babu spends Quarantine time with daughter Sitara Ghattamaneni | தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தனது மகளோடு நேரம் செலவழித்து வர

இறுதியாக இவர் ரஷ்மிக மந்தனாவுடன் நடித்த படம் ‘சரிலேரு நீக்கெவரு’. தனது அடுத்த படத்துக்காக மகேஷ்பாபு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் வந்த Quarantine Break அவரது வேலையை பாதித்தது. எப்போதும் பிசியாக படத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் ஸ்டார்கள் வீட்டில் செலவிடும் நேரம் மிகவும் அரிது.

தற்போது மகேஷ் பாபு தனது நேரத்தை குடும்பத்தினரோடு அதிகமாக செலவிட்டு வருகிறார். உடன் தன் மகளோடு எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாகவே பார்த்து பழகிய மகேஷ் பாபுவை பாசமுள்ள அப்பாவாக பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷம் இதனை சந்தோஷத்தோடு பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Entertainment sub editor