www.garudabazaar.com

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்! விஜய் சேதுபதி புகைப்படத்துடன் வெளியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 'கைதி’, ‘மாஸ்டர்’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் 2017ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

Maanagaram Hindi Remake Vijay Sethupathi Mumbaikar Update

ஒரே இரவில் நடக்கும் இந்தப் படத்தில் சந்தீப் கிருஷ்ணன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹைப்பர்லிங்க் வகையில் இந்த படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது. இந்த படத்தை தமிழில் பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்து இருந்தனர்.  தற்போது இந்தப் படத்தை இந்தியில் 'மும்பைக்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்தினை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ISC இயக்கிவருகிறார். விஜய் சேதுபதி அறிமுகமாகும் முதல் பாலிவுட் படம் இந்த ‘மும்பைக்கர்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Maanagaram Hindi Remake Vijay Sethupathi Mumbaikar Update

இதற்கு முன் லால் சிங் சத்தா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தில் இருந்து சில காரணங்களால் விலகினார். மும்பைக்கர் படத்தில் சச்சின் கெடேகர், விக்ராந்த் மாஸி, தான்யா மணிக்தலா, சஞ்சய் மிஸ்ரா,  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் தமிழில் நடிகர் முனிஸ்காந்த் நடித்த முட்டாள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் இறுதி டப்பிங் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் துவங்கியுள்ளது.  இதனை பிரத்யேக புகைப்படம் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.

Maanagaram Hindi Remake Vijay Sethupathi Mumbaikar Update

Maanagaram Hindi Remake Vijay Sethupathi Mumbaikar Update

People looking for online information on Maanagaram, Mumbaikkar, Santhosh Sivan, Vijay Sethupathi will find this news story useful.