வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ - ''சிம்புவ பாருங்க... என்ன Fire.. என்ன Freshnessnu... என்னோட அப்துல் காலிக்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' படத்தில் சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக அவரது வித்தியாசமான லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

மாநாடு இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட சிம்புவின் பிறந்தநாள் வீடியோ | Maanaadu director Venkat Prabhu shares STR's Birthday

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீயோவை வெளியிட்டு, ''ஒவ்வொரு பிறந்தநாளும் புதிய தொடக்கம். இந்த பிறந்தநாள் என் சகோ சிம்புவிற்கு சேஞ்ச் ஓவராக இருக்கும் என நான் உறுதியா சொல்றேன். சிம்புவிடம் இருக்கும் Fire, Freshness-அ பாருங்க. என்னோட அப்துல் காலிக்கை காட்டுறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்களை கேட்டதாகவும்  அந்த பாடல்கள் சிறப்பாக வந்துள்ளதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இதற்காக யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டியுள்ளார்.

மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Entertainment sub editor