வெங்கட் பிரபுவை அடிக்கப்போகும் பிரேம்ஜி ஏன் ஷாக்காகி நிற்கிறார் ? - செம Fun வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று (மே 24 ) சர்வதேச சகோதரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மக்கள் தங்கள் சகோதரர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு டிக் டாக் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Maanaadu Director Venkat Prabhu shares Brothers day tiktok Video with Premgi goes viral | பிரேம்ஜியுடன் வெங்கட் பிரபு பகிர்ந்த டிக் டாக் வீடியோ வைரல

அதில், 'தர்மத்தின் தலைவன்' பட காட்சி ஒன்றில் ரஜினியை அடிக்கப்போகும் பிரபு அவர் தனது அண்ணன் ரஜினி சாயலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி நிற்பார். அந்த காட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் வெங்கட் பிரபுவை அடிக்கப்போகும் பிரேம்ஜி ஷாக்காகி நிற்கிறார். என்னவென்று பார்த்தால் வெங்கட் பிரபுவின் கையில் மதுபானம் இருக்கிறது. அவரிடம் இருந்து அதனை பிரேம்ஜி எடுத்துச் செல்ல, வெங்கட் பிரபு அதிர்ச்சியாக நிற்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சற்று பழைய வீடியோ என்பதை வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். வெங்கட் பிரபு தற்போது  சிம்பு ஹீரோவாக நடிக்க 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Maanaadu Director Venkat Prabhu shares Brothers day tiktok Video with Premgi goes viral | பிரேம்ஜியுடன் வெங்கட் பிரபு பகிர்ந்த டிக் டாக் வீடியோ வைரல

People looking for online information on Brothers Day, Maanaadu, Premgi Amaren, Venkat Prabhu will find this news story useful.