மாஸ் அப்டேட்! தனுஷ்-கார்த்திக் நரேன் 'படத்தில்' இணைந்த பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கு D43 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் பணியாற்ற இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை சத்யஜோதி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

Lyricist Vivek joined Dhanush 43 Movie, details here

அந்த வகையில் பாடலாசிரியர் விவேக் இப்படத்தில் இணைந்து இருப்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் திரைக்கதை மற்றும் வசனங்களை விவேக் எழுதவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து விவேக்,'' வசனகர்த்தாவாக இது என்னுடைய முதல் படம். தனுஷ், கார்த்திக் நரேன், ஜி.வி.பிரகாஷ், மாளவிகா மோகனன் ஆகியோருடன் இணைந்து வேலை பார்ப்பதில் மகிழ்ச்சி,'' என தெரிவித்து இருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. தனுஷ் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dhanush

Lyricist Vivek joined Dhanush 43 Movie, details here

People looking for online information on Dhanush will find this news story useful.