www.garudabazaar.com

பிரபல சீரியல் நாயகியுடன் கவிஞர் சினேகனுக்கு டும் டும் டும்!! பொண்ணு - மாப்பிள்ளையின் Viral Pics!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 2500க்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன்.

lyricist biggboss snehan marries actress kannika ravi viral pics

இவர் எழுதிய திரைப்பாடல்கள் பல புகழ் பெற்றதாகவும், பல பாடல்கள் சர்ச்சைக்குரியதாகவும் மாறியவை. எனினும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும், இயக்குநர்களின் படங்களுக்கும் பாடல் எழுதிய சினேகனின் பாடல்கள் ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்டவை.

பாண்டவர் பூமி (அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா), ஆட்டோகிராஃப் (ஞாபகம் வருதே), பருத்திவீரன், சாமி (கல்யாணம் தான் கட்டிக்கிட்டு), ராம் (ஆராரிராரோ), ஆடுகளம் (யாத்தே, அய்யய்யோ நெஞ்சு), கழுகு (ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்), சூரரைப்போற்று (காட்டுப் பயலே) உள்ளிட்ட படங்களில் இவர் எழுதிய பாடல்கள் வெகு மக்களிடையே பிரபலமான ஹிட் பாடல்களாகவும் அமைந்தன.

இதனைத் தொடர்ந்து கவிஞர் சினேகன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளையும் ஆற்றினார். இதனிடையே உயர்திரு 420, யோகி உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிநேகன் நடித்து இருந்தார்.

இந்நிலையில்தான் நடிகர் சினேகன், வரும் ஜூலை 29 ஆம் தேதி பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவியை, திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இந்த திருமணம் நடப்பதாக தெரிகிறது. இதையொட்டி சினேகனும், கன்னிகா ரவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகை கன்னிகா ரவி, சமுத்திரகனியின் அடுத்த சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தோன்றியதுடன் சன் டி.வியில் திருமுருகன் இயக்கத்தில் வெளியான ‘கல்யாண வீடு’ உள்ளிட்ட தொடர்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வாழ்த்துச் சொல்லி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், சினேகனுடனான புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

அந்த பதிவில், “கவிஞர் சினேகன் அவர்கள் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என் அவர்கள்மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன்  இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்.” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: யாஷிகா ஆனந்தின் Car விபத்தில் நடந்தது என்ன? பலி ஆன தோழி யார்? வெளியான பரபரப்பு Video!

பிரபல சீரியல் நாயகியுடன் கவிஞர் சினேகனுக்கு டும் டும் டும்!! பொண்ணு - மாப்பிள்ளையின் VIRAL PICS! வீடியோ

lyricist biggboss snehan marries actress kannika ravi viral pics

People looking for online information on Kannika, Kannika Ravi, Snehan will find this news story useful.