www.garudabazaar.com
iTechUS

Rolex மிஸ் ஆயிடுச்சு?.. தளபதி 67 ல சியான் விக்ரம் நடிக்குறாரா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்த லோகேஷ் கனகராஜ், அதன் பின்னர் கார்த்தியை வைத்து 'கைதி' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது.

Lokesh kanagaraj clarify about Chiyaan Vikraman in Thalapathy 67

அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தனது மூன்றாவது படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைய, தனது நான்காவது படத்தில் கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்திருந்தது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதேபோல படத்தின் இறுதி காட்சியில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகவும் விக்ரம் மாதிரி இருந்தது. அதுமட்டுமில்லாமல் கைதி, விக்ரம் உள்ளிட்ட பல படங்களை இணைக்கும் வகையில், LCU Universe என்ற ஒரு விஷயமும் விக்ரம் படத்தின் மூலம் உருவாகியிருந்தது.

Lokesh kanagaraj clarify about Chiyaan Vikraman in Thalapathy 67

அதாவது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக பல ஹீரோக்கள் இணைவது போல லோகேஷ் படம் இருக்கும் என்பது தான் அது. விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் குறித்த தகவல் வெளியான நாள் முதலே படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் தளபதி 67 அப்டேட் எப்போது என்று தான் பலரும் கேட்டும் வருகின்றனர். அதே போல, இணையத்தில் அவ்வப்போது படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவலும் பரவலாக இருந்து வருகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சமீபத்தில் லோகேஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பிப்ரவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 அப்டேட் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Lokesh kanagaraj clarify about Chiyaan Vikraman in Thalapathy 67

இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் கூடியிருக்கும் இந்த தளபதி 67 படத்தின் அப்டேட் மற்றும் படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளன. இதற்கு மத்தியில் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் சியான் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வந்தது. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சியான் விக்ரம் நடிக்க இருந்ததாகவும் பின்னர் அதிலிருந்து அவர் விலகியதாகவும் ஆனால் தற்போது தளபதி 67 திரைப்படத்தின் மூலம் விக்ரம் லோகஷூடன் இணைந்துள்ளதாகவும் கருத்து ஒன்றும் பகிரப்பட்டு வந்தது.

Lokesh kanagaraj clarify about Chiyaan Vikraman in Thalapathy 67

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் ஒன்றை அளித்துள்ளார். தளபதி 67 படத்தில் சியான் விக்ரம் உள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்து லோகேஷ் கனகராஜ், "நானும் கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நிறைய நான் கேள்விப்படுறேன். நீங்களே தெரிஞ்சுப்பீங்க எல்லாமே அப்டேட்ல வந்துரும். இங்கே எல்லாத்தையும் சொல்லிட்டா அப்புறம் சர்ப்ரைஸ் இருக்காதுல்ல" என தனது பதிலையும் லோகேஷ் கூறியுள்ளார்.

ROLEX மிஸ் ஆயிடுச்சு?.. தளபதி 67 ல சியான் விக்ரம் நடிக்குறாரா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh kanagaraj clarify about Chiyaan Vikraman in Thalapathy 67

People looking for online information on Chiyaan Vikram, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay, Vikram will find this news story useful.