பிரம்மாண்டமாக தொடங்கிய லெஜண்ட் சரவணாவின் அறிமுகப் படம் - விவரம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன் சொந்த நிறுவன விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் அருள். இந்த புகழைத் தொடர்ந்து தற்போது சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார் லெஜண்ட்.

Legend Saravana Stores owner Arul's debut film Production number one's puja held Sunday.

’புரடக்‌ஷன் நம்பர் ஒன்’ என்ற பெயரில் தயாராகும் இப்படத்தின் தொடக்க விழா வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோசில் இன்று (ஞாயிறு) நடைபெற்றது. இதில் திரையுலக ஜாம்பவான்களான ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் பிரபு, விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இப்படத்தை இயக்குகின்றனர். முன்னதாக ’லெஜண்ட்’ அருளுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நாயகிகள் பேசப்பட்டு வந்ததாக தகவல்கள் உலவி வந்த நிலையில் புதுமுக நடிகை கீதிகா திவாரி இப்படத்தில் நடிக்கிறார்.

இதனிடையே ட்விட்டரிலும் இன்று ‘லெஜண்ட் சரவணன்’ ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக தொடங்கிய லெஜண்ட் சரவணாவின் அறிமுகப் படம் - விவரம் உள்ளே வீடியோ