லாரன்ஸ காஞ்சனாவா பார்த்துட்டீங்க, ஹிந்தில அக்ஷய் எப்படி இருக்காரு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் உருவாகி வரும் ‘காஞ்சனா’ படத்தின் ரீமேக்கான ‘லக்ஷ்மி பாம்’ திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் திருநங்கை லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Laxmmi Bomb- Akshay Kumar’s Transgender Look Lawrence film is out

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கும் ‘லக்ஷ்மி பாம்’ திரைப்படம், தமிழில் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி 2: காஞ்சனா’ படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக உருவாகி வருகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘லக்ஷ்மி பாம்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அக்ஷய்குமார் திருநங்கை வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக புதிய போச்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அக்ஷய்குமார் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவற்ற வலிமையைக் கொண்டாடும் பண்டிகையே நவராத்திரி. இந்த நன்நாளில் எனது 'லக்ஷ்மி' தோற்றத்தை உங்களுடன் பகிர்கிறேன். இந்தக் கதாபாத்திரத்துக்கான வரவேற்பை காண ஆவலும் உள்ளது, பதற்றமும் உள்ளது. நாம் சவுகரியமாக உணரும் தருணத்தின் முடிவில்தான் வாழ்க்கை தொடங்குகிறது அல்லவா?” என்று தெரிவித்துள்ளார்.