விமானத்தில் செய்தியாளரிடம் உரண்டை இழுத்த காமெடியன் - விமான நிறுவனம் கொடுத்த தண்டனை
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ஸ்டேண்டப் காமெடியன் குனால் கம்ரா இந்திய அளவில் பிரபலம். இவர் சமீபத்தில் இண்டிகோ ஃபிளைட்டில் மும்பையிலிருந்து லக்னோ வரை பயணம் செய்துள்ளார். அப்போது அவருடன் அதே ஃபிளைட்டில் பிரபல செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமியும் பயணித்துள்ளார்.

இதனையடுத்து குனால், அர்னாபின் தொடர்ந்து பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் , அர்னாப் அதற்கு பதிலளிக்கவில்லை. இதனை குனால் வீடியோவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அர்னாபிடம் பிரச்சனை செய்ததாக கூறி இண்டிகோ நிறுவனம் அவரை 6 மாதங்கள் வரை ஃபிளைட்டில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், அவரிடம் பேசுவதற்காக அனுமதி கேட்டேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அதனால் செய்தேன் என்பது போல விளக்கமளித்துள்ளார்.
FYI - Arnab Goswami was in my
flight again this morning while returning from lucknow... I again asked him politely if he wants to have a honest discussion he with his verbal arrogant hand jester he asked me to move away & I did that...
— Kunal Kamra (@kunalkamra88) January 29, 2020