www.garudabazaar.com

"அவ்வளவு தானாடா வாழ்க்கை".. கலை இயக்குனர் சந்தானம் மறைவுக்கு ஆர்ட் டைரக்டர் கிரண் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முக்கிய கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் சந்தானம்.

Kiran Drk tweet about Art Director T Santhanam Demise

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் ஆகிய படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வ திருமகள் படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்திருந்தார். மேலும் இவர், சுதா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இறுதி சுற்று படத்திற்கும் கலை இயக்குனராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் ஆயிரத்தில் ஒருவன். இதிலும் கலை இயக்குனராக சந்தானம் பணிபுரிந்திருந்தார். புதுப்பேட்டை படத்திலும் இவர் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

Kiran Drk tweet about Art Director T Santhanam Demise

அதுமட்டும் அல்லாமல், மகான், ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கு ப்ரொடக்ஷன் டிசைனராகவும் சந்தானம் பணிபுரிந்திருக்கிறார். மாரடைப்பால் சந்தானம் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய மறைவையடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரபல பீஸ்ட், டாக்டர் படங்களின் கலை இயக்குனர் கிரண் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "மச்சி என்ன டா ..( T.santhanam artdirector )அவ்வளவு அவசரம் உனக்கு, எங்களை விட்டு பிரிய 💔..   அவ்வளவு தானா டா வாழ்க்கை.. மச்சி எப்படி முடியும் உன் பிரிவு , வலிக்குது டா.. 💔💔💔😢" என ட்வீட் செய்துள்ளார்.

Kiran Drk tweet about Art Director T Santhanam Demise

People looking for online information on Kiran DRK, Santhanam T will find this news story useful.