எரித்துக் கொல்லப்பட்ட டாக்டர் பிரியங்கா ரெட்டி குறித்து கீர்த்தி சுரேஷ் வேதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான 'நடிகையர் திலகம்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

Keerthy Suresh Condemned about Priyanka Reddy's Murder

தற்போது கீர்த்தி சுரேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது பெஞ்ச் டாக்கீஸ் சார்பாக தயாரிக்கும் 'பென்குயின்' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி லாரி டிரைவர் ஒருவரால் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதார். அப்போது பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் போலீஸார் சந்தேகிக்கின்றனராம்.

இதனையடுத்து நடிகை  கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அறிந்து இதயம் நொருங்கி விட்டது. நாளுக்கு நாள் பயம் அதிகரிக்கிறது. யார் மீது குற்றம் சொல்லுவது என்று தெரியாமல் வார்த்தைகளற்று இருக்கிறேன். ஹைதரபாத் போன்ற நகரங்களை நான் பாதுகாப்பானது என்று கருதியது.

எப்பொழுது நம் நாடு பெண்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் வெளியில் வரலாம் என்ற அளவிற்கு பாதுகாப்பாக மாறும். பிரியங்காவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். நான் கர்மாவை நம்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.