களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்.. சொந்த குரலில் டப்பிங்கா? வேற மாரி சம்பவம் இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார்.

Keerthi Suresh Finished Her Dubbing for Sarkaru Vaari Paata

Also Read | சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் மோதும் சமுத்திரக்கனி.. வெளியான பரபர சூப்பர் மாஸ் SVP டிரெய்லர்!

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. இன்று படத்தின் டிரெய்லரும் வெளியாகி உள்ளது.

Keerthi Suresh Finished Her Dubbing for Sarkaru Vaari Paata

சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சிங்கிள் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் பெயர் கலாவதி என சிங்கிள் பாடல் மூலம் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Keerthi Suresh Finished Her Dubbing for Sarkaru Vaari Paata

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர்.  2022 மே 12-ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து விட்டதாக கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். கேரளாவை சார்ந்த கீர்த்தி சுரேஷ், தான் நடிக்கும் தமிழ், தெலுங்கு படங்களுக்கும் சொந்த குரலில் டப்பிங் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Keerthi Suresh Finished Her Dubbing for Sarkaru Vaari Paata

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

Keerthi Suresh Finished Her Dubbing for Sarkaru Vaari Paata

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்.. சொந்த குரலில் டப்பிங்கா? வேற மாரி சம்பவம் இருக்கு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Keerthi Suresh Finished Her Dubbing for Sarkaru Vaari Paata

People looking for online information on Keerthy Suresh, Sarkaru Vaari Paata Movie, Sarkaru Vaari Paata Movie updates will find this news story useful.