'சூடான சம்மரில் ஜில்லுனு ஒரு கூல்டிரிங்' - அப்படி என்ன டைட்டில்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தில் நடித்ததன் மூலம் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார் அந்த படத்தின் நாயகன் கதிர்.

Kathir's new movie titled Sarbath with Co-star Soori

தொடர்ந்து தான் தேர்ந்தெடுக்கும்  படங்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது தளபதி விஜய்யின் 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் அவர்.

இந்நிலையில் கதிர் நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சர்பத்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பாலாஜி சக்திவேலின் உதவியாளர் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.