Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: 'கால் தூக்கி நின்னான் பாரு'.. ட்ரெண்ட் ஆகும் ‘கண்டா வரச்சொல்லுங்க’ ராயப்பன் வெர்ஷன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் திரைப்படம் கர்ணன்.

Kandaa Vara sollunga Vijay Version Trending Video விஜய்

இத்திரைப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் அண்மையில் வெளியானது. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கண்டா வரச்சொல்லுங்க என்னும் கர்ணன் அழைப்பு பாடல் முதல் பாடலாக வெளியாகியது.

அந்த பாடலில், முழுவதும் ஒரு ஓவியம் தீப்பந்தத்தை கொண்டு தீட்டப்படுகிறது. இறுதியில் தனுஷ் முகம் அதில் தெரிகிறது.

இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் இதே பாடலின் விஜய் வெர்ஷனும்,

பார்த்திபன் வெர்ஷனும் தற்போது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது.

கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Kandaa Vara sollunga Vijay Version Trending Video விஜய்

People looking for online information on Dhanush, KandaaVaraSollunga, Karnan, Vijay will find this news story useful.