கஷ்டப்படுறவங்களுக்கு காஜல் அகர்வால் செய்த உதவி.! - கண்டிப்பாக பாராட்ட வேண்டிய செயல்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை காஜல் அகர்வால் கொரோனா நிவாரணமாக உதவி தொகை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கொரோனா வைரஸ் நிவாரணமாக நிதியுதவி அளித்துள்ளார். ஃபெஃப்சி அமைப்புக்கு 2 லட்சமும், தெலுங்கு திரைப்பட துறையின் நிவாரண நிதிக்கு 2 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதிக்கும், மகாராஷ்டிர முதல்வரின் நிவாரண நிதிக்கும் தலா ஒரு லட்சம் அவர் உதவித்தொகை அளித்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கியுள்ள இவர், வாயில்ல ஜீவன்களுக்கும் தனது உதவியை அளித்துள்ளார்.