"கேரக்டர்லாம் fix பண்ணிட்டு இப்படி பண்றாங்க.. செவுள்லயே விடுவேன்!"... கமலேஷ் & சிந்துஜா பேட்டி!
முகப்பு > சினிமா செய்திகள்திரைப்படம் மற்றும் சீரியல் நடிகர் கமலேஷ் மற்றும் அவரது மனைவி சிந்துஜா பிஹைண்ட்வுட்ஸ் தளத்திற்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களைப் பற்றி இருவரும் பகிர்ந்து இருக்கின்றனர்.
குறிப்பாக சிந்துஜா பேசும்பொழுது, “எங்களை வாழ விடுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். பல திரைப்படங்களை பார்க்கும் பொழுது யார் யாரோ எங்கிருந்தோ வந்து நடிக்கிறார்கள், எங்கிருந்தோ இருந்து பிடித்துக் கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். இங்கே நம்ம ஊரிலேயே நல்ல நடிகர்கள் இப்படி இவ்வளவு பேர் இருக்கும்போது ஏன் எங்கிருந்தோ எல்லாம் நடிகர்களை அழைத்து வர வேண்டும் என்று தோன்றும்.
சின்னத்திரை நடிகர்களை திரைப்படங்களில் நடிக்க வைத்தால் அவர்கள் தெரிந்த முகமாக இருப்பதாக குறிப்பிட்டு அதை மைனஸாக கருதுகின்றனர். ஆனால் இவருக்கென்று (கமலேஷ்) இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பார்ப்பார்கள் அல்லவா? அதை ஏன் ப்ளஸ்ஸாக பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்று தோன்றும். இன்னும் பல திரைப்படங்களை பார்க்கும் பொழுது. ‘இவன் எல்லாம் நடிக்கிறானே என் புருஷனுக்கு என்ன குறைச்சல்? 6 அடி உயரம் வாட்ட சாட்டமாக ஆள் தானே என்றெல்லாம் கூட தோன்றும். இவ்வளவு அனுபவங்கள், 86 சீரியல்களில் 25 வருடங்களாக ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படியான அனுபவமிக்க நடிகர்களை பயன்படுத்திக் கொள்வது இல்லையே என்று தோன்றும்” என்று தனது ஆதங்கத்தை குறிப்பிட்டார்.
மேலும் கமலேஷ் பேசும் பொழுது, “ஒரு வேலைக்கு இன்டர்வியூவுக்கு செல்லும் போது, எல்லாம் ஓகே ஆகி வேலை கன்ஃபார்ம் என சொல்லிவிட்டு, கடைசியில் அவருக்கு பதில் வேறு ஒருவரை அப்பாயிண்ட் செய்தால் எப்படி இருக்கும்? அது போன்ற ஒன்றுதான். இந்த கேரக்டர் இந்த ரோல்.. அதற்கு நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று எல்லாம் பேசிவிட்டு, சரி என்று முடிவு செய்துவிட்டு, அதற்காக காஸ்டியூமும் கூட தயார் செய்து கொள்ளுவோம். ஆனால் கடைசி நிமிடத்தில் வேறொரு பிரஷர் காரணமாக வேறு ஒரு நடிகருக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடும். நமக்கு போன் பண்ணி தகவல் கூட செல்ல மாட்டார்கள்.” என்று குறிப்பிடுகிறார்.
இதைப்பற்றி சிந்துஜா கூறும்போது, “இன்றைக்கு எல்லாருமே செலிபிரிட்டிகளாக இருக்கின்றனர். டிக்டாக் போன்ற விஷயங்களின் மூலமாகக் கூட செலிபிரிட்டிகள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது சீரியல் நடிகர்களாக இருக்கும் நாங்களும் செலிபிரிட்டி தானே? குறைந்தபட்ச ஒரு மரியாதை கூட இல்லையா? ஒரு தகவல் கூட சொல்லாமல் நடிகர்களை மாற்றுவதா என்ன? அதை எல்லாம் பார்க்கும் பொழுது செவுள்லயே ஒன்னு விடணும்” என்று காட்டமாக கூறுகிறார்.
இவர்களின் முழு ஜாலி, கேலி மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பேட்டியை இணைப்பில் உள்ள முழு வீடியோ காணலாம்.
"கேரக்டர்லாம் FIX பண்ணிட்டு இப்படி பண்றாங்க.. செவுள்லயே விடுவேன்!"... கமலேஷ் & சிந்துஜா பேட்டி! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Serial Actors Emotional Metti Oli Uma Maheswari Funeral
- Popular Vijay TV Serial Actress All Set To Marry The Love Of Her Life - Shares Pic Ft Vaishali Thaniga
- Serial Actor Prajin Next Feature Film Illayaraja Musical
- TRENDING: Is This Popular VIJAY TV Serial Actor Going Into Bigg Boss Tamil 5? Here's What We Know
- Is This Popular Vijay TV Serial Actress Participating In Bigg Boss Tamil Season 5? Know Here Ft Divya Ganesh, Mila
- Women Raised Usury Allegation On Tv Serial Actress Jalyalakshmi
- 90s Tv Serial Child Star Bommi Now Pregnant பொம்மி
- Popular Sun TV Serial Actress Ties The Knot; Shares First Pic From The Wedding Ft Kalyana Veedu Fame Sangavi Jayachandran
- Zeetamil Serial Actors Engagement Viral Pics சீரியல் நடிகர்கள்
- Iconic Villain And Popular Serial Actor Passes Away; Tributes Pour In Ft Rizabawa
- This Popular Sun TV And Vijay TV Serial Actress Announces Her Second Pregnancy In Style Ft Neelima Rani
- This Vijay TV Serial Actress Officially Confirms Being A Part Of Vikram; Viral Pic Ft Myna Nandhini, Lokesh Kanagaraj
தொடர்புடைய இணைப்புகள்
- என் புருஷனுக்கு என்னதாய்யா குறை | Kamalesh & Sindhuja
- "என் புருஷனுக்கு என்ன குறைச்சல் 😡 செவுள்ளயே விடுவேன்" - Kamalesh & Sindhuja BOLD Interview
- செவுள்ளையே 4 காட்டணும் 😡 Kamalesh & Sindhuja
- VIRAL VIDEO: கரப்பான்பூச்சியை பழி வாங்க இப்படியா ! கணவனின் காரியத்தால் தெறித்து ஓடிய மனைவி
- Sri Mathrey Nama Tv Serial Launch - Photos
- Enna Vaazhka Da