www.garudabazaar.com

தமிழ் பிக்பாஸ் சீசன் 4 : அமுதவாணன் கலந்துக்கிறாரா ? வேறு யாருலாம் இருக்கா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 4வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் தனது ஸ்டைலில் பிக்பாஸ் 4-ஐ அறிவிக்கும் புரோமோ ஒன்று வெளியாகியது.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், காளி படங்களில் ஹீரோயினாக நடித்த ஷில்பா மஞ்சுநாத்தை பிக்பாஸ் சீசன் 4 டீம் அனுகியுள்ளதாகவும், தற்போது இதுதொடர்பான பேச்சு நடைபெற்றுவருவதாகவும் Behindwoods சார்பாக தெரிவித்திருந்தோம்.

Kamal Haasan's Tamil Bigg Boss season 4 contestants details ft Vijay TV | தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் மேலும் சில போட்டியாளர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் படி ஜோக்கர் பட ஹீரோயின் ரம்யா பாண்டியன், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோ கலந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். ஒருவேளை அமுதவாணன் கலந்துகொண்டால் கடந்த சீசனில் சாண்டி மாஸ்டரின் இடத்தை அவர் பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan's Tamil Bigg Boss season 4 contestants details ft Vijay TV | தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள்

தமிழ் பிக்பாஸ் சீசன் 4 : அமுதவாணன் கலந்துக்கிறாரா ? வேறு யாருலாம் இருக்கா ? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan's Tamil Bigg Boss season 4 contestants details ft Vijay TV | தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்க�

People looking for online information on Amuthavanan, Bigg Boss 4, Kamal Haasan, Ramya Pandian, Shilpa Manjunath, Vijay tv will find this news story useful.