Fakir Other Banner USA

‘யாரு எந்த கட்சின்னு முடிவாகுறதுக்குள்ள ஷோ முடிஞ்சிடும்’ - '4 டேஸ் டூ கோ" பிக் பாஸ் 3 புரொமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். 

Kamal Haasan's Bigg Boss 3 New Promo 4 days to go Vijay Tv

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது.

ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது  சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய  ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் " வாரம் ஒரு தலைவர், தினமும் ஒரு சண்டை யார் எந்த கட்சின்னு புரியறதுக்குள்ள 100 நாட்கள் ஒடோடும். பிக்பாஸ் 4 டேஸ் டூ கோ" என கமல் கெத்தாக பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மேலும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணி க்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

‘யாரு எந்த கட்சின்னு முடிவாகுறதுக்குள்ள ஷோ முடிஞ்சிடும்’ - '4 டேஸ் டூ கோ" பிக் பாஸ் 3 புரொமோ! வீடியோ