ஆரம்பிக்கலாங்களா.. "விக்ரம்" படத்தின் FDFS டிக்கெட் புக்கிங் ரிசர்வேஷன் எப்போ? வேறமாரி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Kamal Haasan Vikram Movie FDFS Ticket Reservation

கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

Kamal Haasan Vikram Movie FDFS Ticket Reservation

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC  உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம்,  கமல்ஹாசனின் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் விக்ரம் படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எப்போது டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் டிக்கெட் முன்பதிவு ரிசர்வேஷன் வரும் மே மாதம் 29 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Kamal Haasan Vikram Movie FDFS Ticket Reservation

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு  உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உரிமத்தை ஸ்ரேஷ்த்  மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Vikram Movie FDFS Ticket Reservation

People looking for online information on Kamal Haasan, Vikram, Vikram FDFS Ticket, Vikram Ticket, Vikram Ticket Booking will find this news story useful.