www.garudabazaar.com

BREAKING: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எந்த ஊர்ல நடக்க போகுது தெரியுமா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

kamal haasan vijay sethupathi fahad vikram movie shooting update

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

kamal haasan vijay sethupathi fahad vikram movie shooting update

படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார்.

kamal haasan vijay sethupathi fahad vikram movie shooting update

பின்னர் நடிகர் பஹத் பாசிலும் விக்ரம் பட படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கிறார். 

kamal haasan vijay sethupathi fahad vikram movie shooting update

இந்நிலையில் விக்ரம் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் ஊர் எது என்ற தகவல் கசிந்துள்ளது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் - 20 ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற இருக்கிறது என நம்பந்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 

தொடர்புடைய இணைப்புகள்

kamal haasan vijay sethupathi fahad vikram movie shooting update

People looking for online information on Fahad Fazil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.