www.garudabazaar.com

'கள்ளன்' படம் தென்மாவட்டங்களில் ரிலீஸ் ஆவதில் சிக்கலா? பரபரப்பான PRESS MEET-ல் பேசப்பட்டது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன.

KALLAN MOVIE PRESSMEET REGARDING SOUTHERN TN DISTRICT RELEASE

'கள்ளன்' என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

KALLAN MOVIE PRESSMEET REGARDING SOUTHERN TN DISTRICT RELEASE

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், " ஒட்டுமொத்த தமிழ் திரையுலக பிரச்சினை இது. என் தனிப்பட்டப் பிரச்சனை அல்ல. எனவே இதை புரிந்து கொண்டு தமிழ் திரைப்படத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்  இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு கு ஆவண செய்ய வேண்டும்.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை துறை முறையாக ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது மட்டுமின்றி இந்த அமைப்புகள் கேட்டபடி வருத்தம் தெரிவித்து கடிதமும் கொடுத்துள்ளோம். இத்தனைக்கும் பிறகும் சில சாதி அமைப்புகள் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாமல் மிரட்டுவது அநீதியின் உச்சம்.

KALLAN MOVIE PRESSMEET REGARDING SOUTHERN TN DISTRICT RELEASE

இனிமேல் ஒவ்வொரு தயாரிப்பாளரும் சாதி அமைப்புகளின் விதிகளுக்கு உட்பட்டு தான் படம் எடுக்க வேண்டுமென்றால் சென்சார் போர்டு எதற்கு? நாங்கள் எங்களுக்காக மட்டும் பேசவில்லை தமிழ் சினிமா தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

KALLAN MOVIE PRESSMEET REGARDING SOUTHERN TN DISTRICT RELEASE

People looking for online information on Kallan, Karu Palaniappan, MK Stalin will find this news story useful.