கணவருடன் குழந்தை இருக்கும் போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்.. அந்த கேப்சன் தான் ஹைலைட்டே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் குழந்தை பிறப்புக்கு பின்னான கணவர் & குழந்தையின் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Kajal Aggarwal shares picture of her new born baby boy with her husband

Also Read | கல்யாண கோலத்தில் சமந்தா & விஜய் தேவரகொண்டா.. புதிய படத்தின் செம கலர்ஃபுல் FIRST லுக் போஸ்டர்!

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.  பின்னர் சில நாட்களுக்கு பின் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்பட உள்ளது.

Kajal Aggarwal shares picture of her new born baby boy with her husband

அன்னையர் தினத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருந்தார். சமீபத்தில் போட்டோஷூட்டும் நடத்தினார். இந்நிலையில் குழந்தை - கணவர் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கணவர் கௌதம் கிட்ஸ்லு, குழந்தையை தூக்கி தோளில் வைத்துள்ளார். இந்த படத்துக்கு காஜல், "அப்பாவின் கடமைகள்" என கேப்சன் போட்டுள்ளார்.

Kajal Aggarwal shares picture of her new born baby boy with her husband

தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால்,  அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா படம் வெளியானது.

Kajal Aggarwal shares picture of her new born baby boy with her husband

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal shares picture of her new born baby boy with her husband

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal with her baby boy will find this news story useful.