காதல் சைக்கோவாக்கும் பிரபாஸ் - சாஹோ பாடல் டீசர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தின் முதல் பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

Kadhal Psycho song teaser video from Prabhas Saaho is out now

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் சில அபுதாபியில் படமாக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் பாடல் காட்சிகள் ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘காதல் சைக்கோ’ பாடலின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பப் செட்டப்பில் வரும் இப்பாடலில் ஷ்ரத்தா கபூர், பிரபாஸின் ரொமான்ஸ் இடம்பெறுள்ளது. இப்படத்தின் அனைத்து பாடல்களும் வரும் ஜூலை.8ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

காதல் சைக்கோவாக்கும் பிரபாஸ் - சாஹோ பாடல் டீசர் இதோ! வீடியோ