’பெருமையா இருக்கு…’ தலைவர் 168 படத்தில் இணையும் கபாலி பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ’தலைவர் 168’ திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் இவருடன் மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

Kabali actor joins Thalaivar 168 movie directed by Siruthai Siva

’தலைவர் 168’ல் நடிப்பவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர்களோடு  நடிகர் கபாலி விஸ்வநாத்தும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளுத்துக்கட்டு படம் மூலம் நடிகராக அறிமுகமான விஸ்வநாத் தொடர்ந்து ’தடையறத் தாக்க’, ’அட்டக்கத்தி’, ’தோனி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கிய ’கபாலி’ திரைப்படம் இவருக்கு புகழை பெற்றுத் தந்தது.

இதைத் தொடர்ந்து இணையத்தில் ட்வீட் செய்துள்ள ’கபாலி’ விஸ்வனாத், ’தலைவர் 168’ பட வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.