Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

போடு.! பிரபல தமிழ் TV சேனலில் ஒளிபரப்பாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'... எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் பிரபல தமிழ் டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Kaathuvaakula Rendu Kaadhal Movie Tamil Television Premiere on Vijay TV

Also Read | BIGG BOSS சீசன் - 6.. எப்போ ஒளிபரப்பு? கமல்ஹாசன் தோன்றும் புதிய டீசர் வீடியோ!

'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்தார்.

கடந்த மாதம்  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்தார்.

இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் & கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படம்  ஸ்டார் விஜய் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி மகா நவமி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு மதியம் 12:30 மணிக்கு  இந்த படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | வாரிசு படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? ரசிகர்களை சந்தித்த விஜய்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kaathuvaakula Rendu Kaadhal Movie Tamil Television Premiere on Vijay TV

People looking for online information on Kaathuvaakula Rendu Kadhal, KRK Movie Tamil Television Premiere, Nayanthara, Samantha ruth prabhu, Vijay Sethupathi, Vijay tv will find this news story useful.