ஜீவாவின் 'சீறு' படத்துக்கு கிடைத்த சென்சார் விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சீறு'. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை 'றெக்க' பட இயக்குநர் ரத்ன சிவா எழுதி இயக்கியுள்ளார்.

Jiiva and D Imman's Seeru Movie Censor Details Out

இந்த படத்தில் ஜீவாவுடன் நவதீப், ரியா சுமன், சதீஷ், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க, பிரசன்ன குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து செவ்வந்தியே, வா வாசுகி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

Entertainment sub editor