Breaking: ஜெயம் ரவி டீமின் மாஸ் பிளான்.. நான்கு வருடத்துக்கு ஒருமுறை தான்.... A Special Day Secret இது.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

jayam ravi's bhoomi teaser to be released on this special day

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பூமி. இத்திரைப்படத்தை லக்‌ஷ்மன் இயக்கியுள்ளார். இவர் ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மூன்றாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. இத்திரைப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் பூமி படத்தின் டீசர் வெளியாகும் தேதி பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 4 வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே வரும் லீப் வருட தேதியான பிப்ரவரி 29 அன்று டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Entertainment sub editor