www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்.. ரிலீஸ் எப்போ? ஜெயம் ரவி சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த தகவல்களை ஜெயம் ரவி கூறியுள்ளார்.

Jayam Ravi Talked About Ponniyin Selvan Part 2 PS2 Release

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. ஒரு பாடலுக்காக படத்தில் இணைந்த பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர்! செம்ம

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.  தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

Jayam Ravi Talked About Ponniyin Selvan Part 2 PS2 Release

முதல் நாளில் பொன்னியின் செல்வன் படம் 80 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்தது.  3 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படம் தற்போது வரை 400+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Jayam Ravi Talked About Ponniyin Selvan Part 2 PS2 Release

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

Jayam Ravi Talked About Ponniyin Selvan Part 2 PS2 Release

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் மீது படிந்துள்ளது. இச்சூழலில் நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். "மணி சார் சொன்னது போல பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல்லது இரண்டு மாதங்கள் கழித்து ரிலீஸ் ஆகலாம்" என ஜெயம் ரவி கூறியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு "கூட்டுழைப்பும் மணிரத்னத்தின் தொலைநோக்கு பார்வையும்" காரணம் என்று கூறியுள்ளார்.

Also Read | சிம்பு - கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல'.. ஷூட்டிங் இந்த ஊர்ல தான்! வைரலாகும் மாஸ் BTS

தொடர்புடைய இணைப்புகள்

Jayam Ravi Talked About Ponniyin Selvan Part 2 PS2 Release

People looking for online information on Jayam Ravi, Ponniyin Selvan 1, Ponniyin Selvan Part 2 Release will find this news story useful.