Fakir Other Banner USA

ஜெயம் ரவியின் 25வது பட ஷூட்டிங் அங்கேயா நடக்குது? - விவரம் உள்ளே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 25வது திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Jayam Ravi starts shooting for JR25 in Pollachi from today

‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சமீபத்திய சென்சேஷன் ஹீரோயின் நித்தி அகர்வால் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று பூஜையுடம் பொள்ளாச்சியில் தொடங்கியது. JR25 திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வரும் ஜூலை.13ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அசுதோஷ் ராணா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இது தவிர, மோகன் ராஜா இயக்கவிருக்கும் ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடிக்கவிருக்கிறார்.