www.garudavega.com

அற்புத கேமராவின் அற்புதங்களை காண ரெடியா? - படக்குழுவின் முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அற்புத கேமராவின் அற்புதங்களை காண ரெடியா? - பிக் பாஸ் பிரபலத்தின் அடுத்தப்படம்

Ivane Ivane Hero, First single track from Alaudhinin Arputha Camera will be releasing on April 15

‘மூடர் கூடம்’ திரைப்படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் நவீன் எழுதி இயக்கியுள்ள ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ திரைப்படத்தின் ‘இவனே இவனே ஹீரோ’ என்ற சிங்கிள் டிராக் பாடல் வரும் ஏப்.15ம் தேதி ரிலீசாகவுள்ளது. இயக்குநர் நவீன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் நாயகி ஆனந்தி நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் மனதை வென்ற நடிகர் சென்றாயனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இப்படம் வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.